சினேகிதனே...

ebook

By ஆர்.சுமதி

cover image of சினேகிதனே...

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

இளவழகன்...!
பிரபலமான ஓவியன். குறுகிய காலத்தில் பெரிய சாம்ராஜ்ஜியத்தை வளைத்துப் போட்டு ஆட்சி செய்பவன்.
பத்திரிகையுலகில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி ஓவியன். மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டவன். அவனுடைய தூரிகையில் தோன்றும் ஒவ்வொரு உருவமும் உயிரோவியம். பல பத்திரிகைகளின் அட்டைப் படத்தை அலங்கரிப்பது அவனுடைய கைவண்ணம்தான்.
கண்களைக் கட்டிப்போட்டு சிந்தனையை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தும் சக்தி அவனுடைய ஓவியங்களுக்கு உண்டு. அவனுடைய கற்பனையில் உருவாகும் ஓவியப் பெண்ணின் அழகைக் கண்டு அதைப் போன்ற பெண் கிடைக்கமாட்டாளா என ஏங்கும் காளையர்கள் அதிகம். பல பத்திரிகைகள் அவனுடைய அட்டைப் படத்திற்காகவே விற்கும்.
புகழின் உச்சியில் இருக்கும் இளவழகனிடமா இவள் அம்மாவின் படத்தை வரையலாம் என்கிறாள்.
யமுனா ஷோபாவை அசைத்தாள்.
"என்னடி... மலைச்சுப் போய் நிக்கறே?"
"ஏய்... இளவழகன்கிட்ட அம்மாவை வரையறதா? நடக்குமாடி இது?"
"ஏன் நடக்காது?" எதிர்க் கேள்வி கேட்டாள் யமுனா.
"இளவழகன் எவ்வளவு பெரிய ஓவியர். புகழின் உச்சியில் இருக்கிறவர். ரொம்ப பிஸியான ஆள். அப்படிப்பட்டவர் இப்படி நம்மை மாதிரி ஆளுங்களுக்கு வரைஞ்சு தருவாரா? அவருக்கு பத்திரிகைகளுக்கு வரையவே நேரம் இருக்காது. நமக்கு வரைஞ்சு தருவாரா?" என்றாள்.
"அதைப்பத்தி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்."இதுக்கு முன்னாடி இளவழகனை நீ சந்திச்சிருக்கியா?"
"இல்லை. நான் அவரோட ரசிகை. அவ்வளவுதான்."
"நீ அவரோட தீவிர ரசிகைங்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே. இளவழகன் வரைஞ்ச படம் உள்ள காகிதம் ரோட்ல கிடந்தாக்கூட ரசிகை நீ. ஏன்டி... இப்படி செய்தா என்ன?"
"எப்படி?"
"ஊர்ல என்ன ஓவியர்களா இல்லை? நாம ஏன் வீணா அவருக்குத் தொந்தரவு தரணும்? வேற ஒருத்தர்கிட்ட அம்மாவோட படத்தை வரைஞ்சிடுவோம்."
"நோ! உங்க அம்மா ரொம்ப அழகானவங்க. அவங்களோட அழகை இளவழகனோட தூரிகையில் பார்க்கணும். அதுதான் என் ஆசை. நாம வீட்டுக்குப் போறோம்..." யமுனா உறுதியாகச் சொன்னாள்.
"எனக்கென்னவோ நீ இளவழகனைப் பார்க்கிறதுக்கு இதை ஒரு சாக்கா வைச்சிருக்கிறேன்னு தோணுது" என்றாள் ஷோபா.
யமுனா புருவத்தை உயர்த்தி சிரித்தாள்.
"அப்படித்தான் வைச்சுக்கயேன்."
"ஏய்... ஏய்... என்னவோ இருக்கு? என்ன காதலா இளவழகனைக் காதலிக்கிறியா?"
"பிரபலமா இருக்கிறவங்க மேல் யாருக்குமே ஒரு ஈர்ப்பு இருக்கும். இது இயற்கை. அதுவும் கலைஞர்கள்ன்னா அவங்க மேலே கொஞ்சம் அதிகமாகவே ஈர்ப்பு இருக்கும். அந்த மாதிரியான ஒரு ஈர்ப்புதான் இது. அதைப் போய் காதல் கீதல்னு..."
"ஏன் இருக்கக்கூடாதா? காதலிச்சா தப்பா? உனக்கு அப்படியெல்லாம் எண்ணம் இல்லைன்னா சொல்லு. நான் வேணும்னா அவரைக் காதலிச்சுட்டுப் போறேன்."
இதைக் கேட்டு யமுனா வாய்விட்டு சிரித்தாள்

சினேகிதனே...