Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
"துபாய் சென்றிருக்கும் என் மகன் நிறைய சம்பாதித்துக் கொண்டு, திரும்பி வருவான், அவன் வந்த பிறகு என்னோட வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்" என்று வருடக் கணக்கில் ஊருக்குள் சொல்லித் திரியும் துபாய்க் கிழவியை சிலர் சிரிப்போடு பார்ப்பர். சிலர் அனுதாபத்தோடு பார்ப்பர்.கிழவியின் மகன் துபாயிலிருந்து எழுதும் கடிதங்களைப் படித்துக் காட்டி, அதற்கு பதில் போடும் வேலையை, மனிதாபிமான அடிப்படையில் செய்து வந்தார் ராஜாஜி. ஒரு நாள் துபாய் போலீஸிடமிருந்து கிழவி மகன் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாய் கடிதம் வருகின்றது.பெரும் குழப்பத்திலாழ்ந்த ராஜாஜி, அந்த விஷயத்தை கிழவியிடமிருந்து மறைக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், கிழவியின் மகன் எழுதுவது போல், தானே கடிதம் எழுதி கிழவிக்கு அனுப்பி வந்தார்.கிழவி மரணிக்கும் போது, தன் மகன் எங்கோ உயிரோடு இருக்கிறான், என்கிற நிம்மதியான சந்தோஷத்தோடு மரணிக்கட்டும், என்கிற நல்ல எண்ணத்தில் ராஜாஜி அந்தப் பழக்கத்தை தொடர்ந்து வந்தார்."கிழவிக்கு அந்த உண்மை தெரிய வந்ததா?..அதன்...பின் நடந்தது என்ன?" என்பதை அறிந்து கொள்ள கதையை வாசியுங்கள்...வாசகர்களே!