Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

ebook

By R Ponnammal

cover image of Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஆதிபுரி, தர்ப்பாரண்யம், விடங்கபுரம் மற்றும் நளேச்சரம் என்றெல்லாம் போற்றப்படும் திருநள்ளாறு, சனிபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தெய்வீக திருத்தலமாகும். பிரம்மன் முதலான அனைத்து தேவர்களும் வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தின் வரலாறு, சிறப்பு, வழிபாடுகள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் இத்தலத்திற்கு விஜயம் செய்து பேறுபெற்றவர்களின் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியும், நிடத நாட்டு மன்னன் நளனும் காதல் கொண்டு திருமணம் புரிந்ததையும், பிறகு சனீஸ்வரன் நளனைப் பற்றிக் கொண்டதால் அவன் மதிமயங்கி, சூதாடி நாடிழந்து, மனைவி மக்களைப் பிரிந்து துன்புற்றதையும் முடிவில் இறைவன் அருளால் துயர் நீங்கி இன்பம் பெற்றதையும் அழகு படக் கூறப்பட்டுள்ளது.
நமது புண்ணிய புராதன பூமியான பாரத நாட்டின் பெருமைக்கு காரணமானவை அதன் புராணங்களும் இதிஹாசங்களும் தான். அவற்றில் பொதிந்துள்ள நீதி நெறிகள் எக்காலத்துக்கும், எந்நாட்டவருக்கும் ஏற்றவை. நீதி தெரிந்த தருமபுத்திரர் சூதாடி நாட்டை இழந்ததன் காரணமான குருக்ஷேத்திரப் போர் மூண்டதை மஹாபாரதம் விவரிக்கிறது.
அந்த மஹாபாரதக் காவியத்தின் ஒரு அத்தியாயமான 'நளசரித்திரம்' சூதாட்டத்தால் நளமஹாராஜன் அனுபவித்த இன்னல்களை தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பாவும், அதிவீர ராமபாண்டியர் எழுதிய நைடதமும் சிறப்பிடம் பெற்றுள்ளன.

Shanidosham Nivaranam Alikkum Thirunallaru Thala Varalaru Matrum Nala Charitam